மருந்துக்கு விடை கொடுப்போம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மருத்துவம்

பத்மசிறீ மருத்துவர்
வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவம்,
சென்னை

குழந்தைப் பருவத்தில் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் சரியாகவே இருக்கும். நோய்களின் தாக்கமோ, மருந்துகளின் பக்கவிளைவுகளோ மற்றும் சத்துணவு குறைவால் ஏற்படும் விளைவுகளோ ஏதுமின்றி இளமைப் பருவத்தில் எல்லா உறுப்புகளும் நன்றாகவே இயங்கி வரும்.

இந்நிலையில் அவர்களுக்கு கொடுக்கும் மருந்தின் விளைவு நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக முதியோர்களின் உடல் உறுப்புகள் நோய்களினாலும் எடுத்துக் கொண்ட மருந்துகளினாலும் மற்றும் முன்னரே செய்து கொண்ட  அறுவை சிகிச்சையினாலும்  மிகவும் பாதிப்பு அடைந்த நிலையில் இருக்கும்.

இத்தகைய முதியோருக்கு மருந்தின் விளைவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பது மட்டுமல்ல; அதன் தீயவிளைவுகளும் அதிகமாக இருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

மருந்துகளின் தீய விளைவுகள்
ஏற்படக் காரணங்கள்

உட்கொள்ளும் மருந்துகள் பெரும்பாலும் சிறுநீரகம் மூலமாகவே வெளியேற்றப்படுகின்றன. வயது ஆக ஆக சிறுநீரகத்தின் வேலைத் திறன் குறைகிறது. அதனால் மருந்துகள் போதிய அளவுக்கு வெளியேற்றப்படாமல் உடலிலேயே தேங்கி தீமைகளைத் தருகின்றன.

வயது ஆக ஆக உடல்தசையின் அளவு குறைகிறது (lean body mass). ஒருவர் உட்கொள்ளும் மாத்திரையின் அளவு அவரது உடல் தசையின் எடைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். ஆனால், முதுமையில் அவ்வாறு மாத்திரையின் அளவைக் குறைப்பது இல்லை. அதனால் மருந்தின் தீமை அதிகமாகிறது.

பலவிதமான மருந்துகளை (multiple drug)  எடுத்துக் கொள்வதினாலும் பக்கவிளைவுகள் அதிகரிக்கும்.

பலவித மருந்துகளும் அதன் பக்கவிளைவுகளும்

பக்கவிளைவுகள் – பல மருந்துகள் எடுத்துக் கொள்வதால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. இவற்றால் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படலாம்.

நிதிச் சுமை – பல மருந்துகளை வாங்கும் போது அதனுடைய விலையும் அதிகமாகி, நிதிச்சுமை ஏற்படுகிறது. பல முதியவர்களினால் மாத்திரைகளை அவர்களின் நிதி நிலையின் காரணமாக வாங்க முடியாத நிலையில் இருப்பார்கள்.

மனச் சுமை – முதுமையில் சற்று மறதியும் இருக்கும். அவர்களால் எல்லாதவிதமான மாத்திரைகளையும் நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து கொள்வது மிகவும் சிரமம். உதாரணம் : காலை, மாலை, உணவிற்கு முன்பு, உணவிற்கு பின்பு, பாதி மாத்திரை அல்லது முழு மாத்திரை.

பலவித மருந்துகளைக் குறைப்பது எப்படி?

நாள்தோறும் செய்யும் உடற்பயிற்சி மூலம் ஆரம்ப நிலையில் உள்ள பல நோய்களை மருந்தின்றி குணமடையலாம். உதாரணம் :உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன், தூக்கமின்னை

நாள்தோறும் செய்யும் யோகா, தியானம், பிராணாயாமம் செய்வதின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும்

உணவு முறையை மாற்றுவதின் மூலம் பல நோய்களுக்கு மருந்துகளின்றி குணமடையலாம், உதாரணம்  : சத்துணவு குறைவது, மலச்சிக்கல், நீரிவுநோய், உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பழங்கள், உதாரணம் :நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை பழம் போன்றவைகள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கொட்டை வகைகள், உதாரணம் :முந்திரி, பாதாம், போன்றவைகள்

தடுப்பூசி – நிமோனியா மற்றும் இன்ஃபூயன்ஸா நோய்களுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதின் மூலம் அந்நோய்க்கான மாத்திரைகளை தவிர்க்கலாம்

இயன்முறை சிகிச்சை மூலம் ஆரம்பநிலையில் உள்ள மூட்டுவலி, தசை இறுக்கம், நிலை தடுமாறுதல், உடற்பருமன் போன்ற தொல்லைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்

சுய சிகிச்சை முறையை தவிர்ப்பதின் மூலம் தேவையற்ற பல மருந்துகளை மிகவும் குறைக்க முடியும்

மாற்று சிகிச்சை முறை மூலம் பலவித மருந்துகளை குறைக்க வாய்ப்புண்டு.

இறுதியாக இதை மனதில் கொள்ளுங்கள்

மருந்தை தொடர்ந்து நீண்ட நாட்கள் உட்கொண்டால் அதுவே விஷமாகக்கூட மாறலாம்.”

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *