குமரி-பத்மநாபபுரம் நகராட்சித் தலைவருக்கு தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்குதல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம், செப். 12- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிராமங்களுக்கும் தந்தை பெரியாருடைய நூல்களை கொண்டு சேர்க்கும் முயற்சியில் குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர் கள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பத்மநாபபுரம் நகர் மன்றத் தலைவர் அருள் சோபனுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை வழங்கினார்.அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களுக்கும் தந்தை பெரியாருடைய பகுத்தறிவு அறிவியல் நூல்கள் வழங்கப்பட்டன. செப்டம்பர் மாதம் முழுவதும் பெரியாருடைய நூல்களை வழங்கி பெரியார் பிறந்த நாள் விழாவினை கொண்டாடி வருகின்றனர் குமரி மாவட்ட கழகத் தோழர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *