தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாக நடத்திட தருமபுரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

தருமபுரி, செப். 10- தருமபுரி பெரியார் மன்றத்தில் 7.9.2026 அன்று மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரனின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கருப்புச் சட்டை மா.முனியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொதுக்குழு உறுப்பினர் கு.சரவணன், நகரத் தலைவர் கரு.பாலன், நகரச் செயலாளர் இரா.பழனி, தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் பெ.மாணிக் கம், விவசாயி அணி மாவட்டத் தலைவர் ஊமை.காந்தி, மேனாள் மாவட்டத் தலைவர் எல்.அய்.சி. மு.பரமசிவன், பழைய தருமபுரி அருள் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை கருத்துரை வழங் கினார்.

இறுதியாக அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண் டாட வேண்டியும், சென்னை தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை சிறப்பாக செய்திடவும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் பெரியார் சிலைக்கு, அந்த பகுதியி லுள்ள திராவிடர் கழகத் தோழர்கள் மாலையணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தல்,

திராவிடர் கழகத்தின் குடும்பங் களில் பெரியார் படம் வைத்து மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுதல்,

தருமபுரியிலுள்ள சுயமரியாதை நூற்றாண்டு நினைவு தூணில் கழகக் கொடியை ஏற்றுதல்,

இறுதியாக செப்டம்பர்-17 அன்று காலை 09:30 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தின் அனைத்து அணியின் சார்பில் மாலை அணிவித்து சிறப்பித்தல்.

செப்டம்பர்-15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்விற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாலை யணிவித்து சிறப்பிக்கப்படும்,

தலைமைச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங் களையும் செப்டம்பர் மாதம் முழுவதும் சிறப்பாக செய்வதென தீர்மானிக்கப்படுகிறது, தருமபுரி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கான இனிப்புப் பெட்டிகளைக் கழகத் தோழர்களோடு பதிவு செய்து பெற்றுக்கொண்டு சிறப்பித்தல்.

தலைமை அறிவித்துள்ள ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து செ-11 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்துதல்.

புதிய பொறுப்பாளர்கள்

திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் எல்.அய்.சி. மு.பரமசிவன், திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பெ.கோவிந்த ராஜ், திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட தலைவர் வி.பா.அறிவுக்கரசு ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெய ராமனால் அறிவிக்கப்பட்டது.

இறுதியாக மேனாள் மாவட்டச் செயலாளர் பெ.கோவிந்தராஜ் கூட்டத்தில் கலந்துகொண்ட அனை வருக்கும் நன்றி கூறி முடித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *