பட்டுக்கோட்டை, செப்.9- பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் ஆ. சண்முகவேலின் சகோதரர் சீரிய பகுத்தறிவாளர் பள்ளத்தூர் ஆ. வீரமணி – செந்தாமரை இணையரின் மகன் திரைப்பட உதவி இயக்குநர் ஆதிஸ்வரனுக்கும், மலேசியா பினாங்கில் வசிக்கும் நினைவில் வாழும் செல்வமணி – மொகிந்தர்கவுர் (பஞ்சாப்) இணையரின் மகள் பிரதீனாவுக்கும் 06.09. 2026 அன்று காலை 10:45 மணியளவில் பட்டுக்கோட்டை கே கே டி சுமங்கலி மகாலில் மாவட்டக் கழகக் காப்பாளர் அரு.நல்லதம்பி தலைமையிலும், மணமகனின் சகோதரி வீ.அபிநயா வரவேற்புடனும், தஞ்சை மாநகர மேயர் (பொறுப்பு) மருத்துவர் அஞ்சு கம் பூபதி, திரைப்பட இயக்குநர் சீரிய பகுத்தறிவாளர் இராம் முன்னிலையிலும், மாவட்ட கழகக் காப்பாளர் அத்தி பெ.வீரையன், மாவட்டத் தலைவர் மல்லிகை வை. சிதம்பரம், வாழ்த்துகளுடன் தாலியின்றி வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி ஏற்று வாழ்வில் இணைந்தனர்.
வாழ்க்கை இணையர்களை வாழ்த்தி உரையாற்றிய தஞ்சை மாநகர மேயர் பெண்கள் பழமையி லிருந்து விடுபட்டு புதுமைக்கு வர வேண்டும். ஒரு குழந்தைக்கு மகப்பேறு செய்யும் மருத்துவரான நான் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை குழந்தை பிரசவித்தப் பின் நாங்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்து 5, 10 நிமிடங்கள் சென்று குழந்தை பிறந்த நேரத்தை கணக்கிட்டு சொல்வோம். எனவே நாங்கள் சொல்லும் நேரமா? குழந்தை பிறந்த நேரமா? எந்த நேரத்தில் நீங்கள் ஜாதகம் கணித்துப் பார்ப்பீர்கள் என்று அறிவார்ந்த வினாவை பெண்கள் மத்தியில் தொடுத்து உரையாற்றினார். சீரிய பகுத்தறிவாளர் ஆன திரைப்பட இயக்குநர் இராம் மணமக்களுக்குள் நாடு கடந்து முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்ததை விரிவாக எடுத்துரைத்து உரையாற்றினார்.
வாழ்க்கை இணையர்களை வாழ்த்தி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் கரு. கிருஷ்ணமூர்த்தி, சேது ஒன்றியத் தலைவர் சி. செகநாதன், தலைமை ஆசிரியர் இள.குமணன், பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்டத் தலைவர் வீ. ஆத்மநாதன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
மணவிழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கா. தென்னவன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து துரைராஜ், பேராவூரணி இரா. நீலகண்டன், மேனாள் நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், என். கே .ஆர். நாராயணன், மாணிக்க சந்திரன், வழக்கறிஞர் அ.அண்ணாதுரை, பெரியார் பெருந்தொண்டர் அ.காளிதாசன், கவிஞர் மு. மோகன், சோம .நீலகண்டன், புலவஞ்சி பெ.அண்ணாதுரை, அ.பாலசுப்பிரமணியன், த.இராஜலட்சுமி, சி.ரெங்கசாமி, சு.அரவிந்த் குமார், மா. குமரவேல், சு.வசி, க.சசிகுமார், நீ. தேவி, சி.சந்திரமோகன், ம.சிவஞானம், கலைச்செல்வி சண்முகவேல், பள்ளத்தூர் பெரியவர் அரு .இராமசாமி உட்பட ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினார்.
திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் அ.சண்முகவேல் நன்றி கூறினார்.
மணமக்கள் சார்பில் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கப்பட்டது.
எந்தவிதச் சடங்குகளும் இன்றி இணையேற்பு விழா எளிமையாகவும், சிக்கனமாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடைபெற்று இனிதே முடிந்தது.
