புத்தேரியில் கி.பி.15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம், செப்.8- காஞ்சிபுரம் அருகே புத்தேரியில் கி.பி.15-ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பத்தை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் நேற்று முன்தினம் (6.9.2026) கண்டு பிடித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமகோட்டி என்பவா் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தூய தாமஸ் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் புத்தேரி சாலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சதிக்கல் சிற்பம் 46 செ.மீ. உயரமும்,36 செ.மீ அகலமும் கிழக்குத்திசை பார்த்தவாறு ஒரு சிறிய கட்டடத்தினுள் உள்ளது. இச்சதிக்கல்லில் வீரன் ஒருவனுடன் அவனது மனைவி இடப்பகுதியில் உள்ளார். வலப்புறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் வீரன் சிற்பம் இரு கைகளையும் வணங்கிய நிலையில் உள்ளது. இடப்பக்கம் நிற்கும் பெண் சிற்பத்தின் இடது கை தொங்க விடப்பட்டுள்ளது. வலது கை மலா் மொட்டு ஒன்றை உயா்த்திப் பிடித்துள்ளது.

இருவரின் கைகள், தோள்பட்டைகள், கழுத்து, மார்புப் பகுதிகளில் காதணிகள் காணப்படுகின்றன. பட்டாடை அணிந்துள்ள இவா்கள் இருவரின் தலையிலும் உள்ள கொண்டைகள் இடப்பக்கமாக இருக்கிறது. இச்சதிக்கல் சிற்பத்தின் காலம் கி.பி.15 -ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இத்தகவலின் உண்மைத்தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்டியா் சு.உமாசங்கரும் உறுதிப்படுத்தியுள்ளதாக மு.அன்பழகன் தெரிவித்தார்.

மதம் சார்ந்த கருத்துகளை பிரச்சாரம் செய்யக்கூடாது!

சென்னை, செப்.8- ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரமிடடம், மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

சில யோகா நிறுவனங்கள், யோகா கற்றுத் தருவதாக கூறி, மதம் சார்ந்த கருத்துகளை பரப்புவதாக எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

யோகா, யோகாவாக இருக்க வேண்டும். அதற்குள் மதம் சார்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதை சுட்டிக் காட்டினார். மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் போது, ஒரு அமைப்போ அல்லது அரசோ, மதம் சார்ந்த கருத்துக்களை பிரசாரம் செய்யக்கூடாது; அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும்.

– தொல்.திருமாவளவன் எம்.பி.,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *