ஆதார் முகவரி மாற்றம்! விண்ணப்ப நிலை அறிவது எப்படி?

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காக விண்ணப்பித்திருப் பவர்கள் தங்களது விண்ணப்ப நிலை குறித்து அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

ஒருவர் முகவரி மாற்றக் கோரிக்கையின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது? என்பது குறித்து ஆதார் அமைப்பு பல வகைகளில் விளக்கி வருகிறது.

பொதுவாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செயல்படுத்தப்பட்டதும், உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது என்று முதலில், விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வரும். அதனைக் கொண்டும் உறுதி செய்து கொள்ளலாம்.

இல்லை, குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால், இணையம் மூலம் முகவரி மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்கும் முறை வருமாறு:

முதலில் யுஅய்டிஏஅய் இணைய தளத்திற்குச் செல்லவும்.

அதில் எனது ஆதார் (My Aadhaar) பிரிவின் கீழ் உள்ள ஆதார் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்க்கவும் Check Aadhaar Update Status – என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் ஒரு படிவம் வரும். அந்த படிவத்தில் உங்கள் விவரங்களை உள்ளிடவும்

அதாவது, ஆதார் கோரிக்கை நிலையை அறிய, ஆதார் எண் அல்லது புதுப்பிக்க விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட கோரிக்கை எண் (URN) ஆகியவற்றை வழங்க வேண்டியிருக்கும்.

அனைத்தையும் சரியாக பதிவிட்டு சப்மிட் கொடுத்ததும் முகவரி மாற்றக் கோரிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை அடுத்த பக்கத்தில் காண்பிக்கும்.

ஆதார் முகவரி மாற்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு, முகவரியைக் கொண்ட சான்றிதழ் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  1. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
  2. பான் அட்டை (பான் கார்டு)
  3. வங்கி கணக்குப் புத்தகம் (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)
  4. குடும்ப அட்டை
  5. வாக்காளர் அடையாள அட்டை
  6. மாற்றுத்திறனாளி அட்டை
  7. ஊரக வேலை அட்டை
  8. மின்சாரக் கட்டண ரசீதுகள் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது),
  9. தொலைபேசி லேண்ட்லைன் கட்டண ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெய்ட் மொபைல்) கட்டண ரசீது/ பிராட்பேண்ட் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது)
  10. தண்ணீர்க் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
  11. எரிவாயு இணைப்பு (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது)
  12. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்)
  13. சொத்து வரி ரசீது (ஓராண்டுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
  14. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்/ தானப் பத்திரம்
  15. பதிவு செய்யப்படாத வாடகை/ குத்தகைப் பத்திரம் இதில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்றிக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *