இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? கனிமொழி எம்.பி. கேள்வி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.7- சென்னையில் தவெக நிர்வாகி அடையாளம் தெரியாத கும்பலால் 5.9.2026 அன்று வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிய நிலையில், இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக வட்டச் செயலராக இருந்தவா் வண்ணாதுறை கண்ணன். இவா் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைத்துக்கொண்டார். இந்த சூழலில், 5.9.2026 அன்று இரவு அடையார் வண்ணாதுறை ராமசாமி அவென்யூவில் அவரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.

சாஸ்திரி நகா் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனா். இது அரசியல் ரீதியான படுகொலையா அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இது தலைநகரமா, இல்லை கொலை நகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தலைநகர் சென்னையின் மய்யப் பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந் தவர் எனவும் கூறப்படுகிறது.

மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்து விட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி என அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *