தஞ்சாவூர், செப்.7- தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை யிலிருந்து டெல்டா பாசன மாவட்டங்களின் சாகுபடித் தேவைக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்துசேர்ந்து, அங்கிருந்து காவிரிக் கிளை ஆறுகளான வெண்ணாறு, கல்லணைக்கால் மற்றும் காவிரி டெல்டா பாசனக் கால்வாய்களுக்குப் பிரித்து அனுப்பப்படுவது வழக்கம்.
நடப்பாண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் சாகுபடித் தேவைகளைக் கருத்தில்கொண்டு, கல்லணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர்த் திறப்பால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
