தந்தை பெரியார் பிறந்தநாளை பல்வேறு சிறப்புகளுடன் கொண்டாட அரூர் மாவட்டக் கழகம் முடிவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரூர், செப். 7- அரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 5/9/2026 அன்று மாலை 4 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கு.தங்கராஜ் வரவேற்றுப் பேசினார். ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ. சிவலிங்கம், ஒன்றியச் செயலாளர் பச்சையப்பன், கடத்தூர் நகரத் தலைவர் புலவர் நெடுமிடல், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ.நடராஜன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சொ.பாண்டியன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில பகுத்தறிவுக் கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை  மாவட்ட கலைத்துறைச் செயலாளர் கவிஞர் கீரை.பிரபாகரன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கியும் கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் உரையாற்றினர். மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.வித்தியாகர், தருமபுரி நகர பொறுப்பாளர் கண். ராமச்சந்திரன், கடத்தூர் தமிழ்ச்செல்வி, துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சஞ்சீவன் நன்றி கூறினார்.

தீர்மானம்1. தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை அனைத்து பகுதிகளிலும் சிறப்புடன் கொண்டாடும் வகையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவிய போட்டி நடத்தி பரிசு வழங்குதல். மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு அந்தப் பகுதி தோழர்கள் பங்கேற்புடன் மாலை அணிவித்து இனிப்பு  வழங்கி கொண்டாடுவது, மற்ற இடங்களில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவது, தலைமைக் கழக ஏற்பட்டால் வழங்கப்படும் இனிப்புப் பெட்டிகளை வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *