விநாயகர் சதுர்த்தி என்ற பெயரால் பொம்மைகளை அனுமதி இல்லாத நீர் நிலைகளில் கரைக்க கூடாது : அரசு ஆணை

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.06 விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது:

வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை சிலை தயாரிக்கவும், சிலை ஆபரணங் களுக்கும், பந்தல்களை அலங் கரிக்கவும் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மோகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். வர்ணம் பூச எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகள், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத் தப்பட வேண்டும். பூஜைக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகளையும், பிரசாத விநியோ கத்துக்கு மக்கும் தட்டுகள், கண்ணாடி கோப்பைகளையும் பயன்படுத்தலாம். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விதிமுறைகளை பின்பற்றி கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது. எனவே, பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *