சிவகங்கை, செப்.06 கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அக ழாய்வில் தமிழர்களின் பண்டைய நீர் மேலாண்மை நுட்பத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில், 8 அடுக்குகள் கொண்ட பழமையான உறைகிணறு ஒன்று சேத மடையாமல் கண்டறியப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் கீழடியில் வாழ்ந்த மக்கள் குடிநீர் தேவைகளுக்கும், விவசாயப் பாசனத்திற்கும் மற்றும் சாயத் தொழிலுக்கும் உறைகிணறுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு சான்றாக, இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு கட்ட அகழாய்விலும் 2 முதல் 7 அடுக்குகள் வரையிலான பல்வேறு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
