தஞ்சாவூர், செப். 5- இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசி யேசன் (IPAA) சார்பாக தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட பேட்மின்டன் பெண்கள் மற்றும் ஆண் களுக்கான போட்டி 25.08.2026 அன்று தஞ்சாவூரில் உள்ள சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அணி பெண்கள் பிரிவிலும் ஏ.இனியா, எஸ்.மத்தியா, எம்.தாரணி, கே.அபிநயா, எஸ்.அனுஷ்கா மற்றும் ஆண்கள் பிரிவிலும் டி.அரிகரன், எம்.சரவணன், பி.முகமது இம்ரான்கான், சி.ராஜராஜன், எம்.மாதவன் வெற்றி பெற்று வாகையர் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் மாநில அளவில் போட் டிக்கு தகுதி பெற்றது.
இக்கல்லூரியின் உடற் கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ. கிரிதரபிரசாத் அவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்களை ஒருங்கிணைத்தார்.
வெற்றி பெற்ற வீரர்களை கல்லூரி யின் முதல்வர் க.ப.வெள்ளி யங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, அனைத்து துறைத்தலை வர்களும் மற்றும் பேராசிரியர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரி வித்தனர்.
