365 நாட்களும் கடைகள் செயல்பட அனுமதி! தமிழ்நாடு அரசாணை வெளியீடு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் (365 நாட்களும்) திறந்திருக்க வழங்கப்படும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பொது விடுமுறை நாள்கள் மற்றும் வார இறுதி நாட்களையும் சேர்த்து ஆண்டு முழுவதுமாக 365 நாட்களும் தொடர்ந்து இயங்குவதற்கு ஏற்கெனவே அரசு அனுமதி அளித்து வந்தது. இந்த அனுமதியின் காலம் முடிவடைய உள்ள நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், இந்த அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த அனுமதியைப் பெறும் நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாகப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் முறையான விடுப்பு வழங்குவதுடன், இரவுப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் வணிக நிறுவனங்களும் வியாபாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

மேட்டூர் அணைக்கு

விநாடிக்கு 8,456 கனஅடி நீர்வரத்து

தருமபுரி, செப். 5- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தற்போது விநாடிக்கு 8,456 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் (3.9.2026) காலை விநாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர் வந்தது. மாலையில் 8,041 கனஅடியாகவும் நேற்று (4.9.2026) காலை 7,790 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து விநாடிக்கு 8,456 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 92.19 அடியாகவும், நீர் இருப்பு 55.18 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

இதேபோல் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் (3.9.2026) காலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவுடன் தொடர்ந்தது. ஆனால், நேற்று மதியம் 2 மணியளவில் விநாடிக்கு 8,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து கணக்கிடப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *