சென்னை, செப்.5- பாபநாசம் அணையி லிருந்து தண்ணீரை திறந்து விட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“பாபநாசம் அணையி லிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்துள்ள சுமாா் 5,000 ஏக்கா் வாழைப் பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
பலமுறை மனு அளித்தும், தொடா் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிா்வாகமும் நீா்வளத் துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயி களை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த அரசு.
விவசாயிகளின் கோரிக் கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கனிமொழி அதில் குறிப்பிட்டுள்ளார்.
