தடகளப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் சாதனை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப்.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி டி.யோகதர்ஷினி 38ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான தடகளப் (Athletic Championship) போட்டியில் 80மீ தடைத்தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 60மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் வென்று சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து South Zone தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைமுறை நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழும், ஆசிரியர்களுக்கு பாராட் டும் வழங்கப்பட்டது.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையா சிரியை மற்றும் ஆசிரி யர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *