காணாமல் போகும், சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.600 உதவித்தொகை சட்டப் பேரவையில் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 03- சட்டப்பேரவையில் நேற்று (2.9.2026 மீன்வளத் துறை அமைச்சர் சிறீநாத், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும்.

திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத் தில் நவீன மீன் சந்தை அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் டிஜிட்டல் மின் ஏலக்கூடம் அமைக்கப்படும்.

மீன் வளம் மற்றும் நீர் வாழ் உயிரி னங்கள் வளர்ப்பு, கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் திறனறி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்கு ஊக்கத் தொகை ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும். அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் நாளொன்றுக்கு உதவித்தொகை ரூ.500-இல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 24 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அடுத்த பிரதமர் யார்?

.வெ.க. – காங்கிரஸ் கூட்டணியில் மோதல்

சென்னை, செப். 03- முதலமைச்சர் ஜோசப் விஜய்யை 2026-ல் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியை, 2029-இல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார் என்று த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெளிவாக இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நேற்று (2.9.2026) கூறும்போது, ‘‘2029-ல் பிரதமர் யார் என்பதை இனி டில்லி முடிவு செய்யப்போவது இல்லை; தமிழ்நாடுதான் முடிவு செய்யும்.

எங்கள் தலைவர் ஜோசப்விஜய்தான் 2029-இல் பிரதமராகப் போகிறார். 2026-இல் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த ராகுல் காந்தியே, 2029-இல் அவரது கையைப் பிடித்து பிரதமர் நாற் காலியிலும் அமரவைப்பார். இந்திய அரசியலில் 2029-இல் மிகப்பெரிய அதிர்ச்சி கரமான மாற்றம் ஏற்படும்’’ என்றார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் தாரகை கத்பர்ட், ‘‘அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்திதான்.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசுகின்றனர். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யே தெளிவாக இருக்கிறார். எனவே, தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்க வேண்டாம். 2029-இல் ராகுல் காந்திதான் பிரதமர்’’ என்று தெரிவித்தார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *