விண் ஆளும் விழைவோடு வீர நடை: வான்படை முகாமில் வாகை சூடிய திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செல்வங்கள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப்.3- இந்தியத் திருநாட்டின் தலைநகர் டில்லியில் நடைபெறும் பெருமைமிக்க குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான முதற்கட்டக் களமாக அமைந்த தேசிய மாணவர் படை சிறப்புப் பயிற்சி முகாமில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது ஈடு இணையற்ற திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள புதுவயல் சிறீ வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், காரைக்குடி 9ஆவது தமிழ்நாடு தேசிய மாணவர் படைப் பிரிவின் சார்பில் ஆண்டுப் பயிற்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குடியரசு தின அணிவகுப்புத் தேர்வு முகாம் அண்மையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான சிறந்த மாணவப் படைவீரர்கள் பங்கேற்ற இக்கடுமையான தேர்வு முகாமில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் வான்படைப் பிரிவு தேசிய மாணவர் படை வீரர்கள் இருவர் பங்கேற்றுப் பயிற்சி நிறைவு சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
கா.பிரதீப் குமார் (படைவீரர் எண்: TN2025JDAF7110427), பா.சாந்தினி (படைவீரர் எண்: TN2025JWAF7110431)
பல நாட்கள் நடைபெற்ற இம்முகாமில், அதிகாலை உடற்பயிற்சி, கம்பீரமான நடை மற்றும் அணிவகுப்பு ஒழுங்கு, துல்லியமான துப்பாக்கி சுடுதல், வானூர்தி மற்றும் தொழில்நுட்ப அறிவு, அத்துடன் சவால்களை எதிர்கொள்ளும் தலைமைப் பண்பு ஆகிய அனைத்து நிலைகளிலும் இவ்விரு மாணவர்களும் தங்களின் சீரிய அர்ப்பணிப்பையும் அசாத்திய திறமையையும் நிலைநிறுத்தினர்.
இளம் பருவத்திலேயே தேசப் பற்றையும் ஒழுக்கத்தையும் நெஞ்சில் ஏந்தி, பள்ளிக்கும் திருச்சி மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும், தேசிய மாணவர் படைப் பொறுப்பாசிரியர் இ.மனோன்மணியையும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணித் தோழர்கள் அனைவரும் உளமாரப் பாராட்டித் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *