தளபதி மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்நாட்டு மக்களே பாதுகாப்புக் கேடயமாக இருப்பார்கள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் உள்நோக்கம் உடையது மட்டு மன்று, சிறுமைக் குணமே ஆகும்.

60 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்ட ஒருவரின் மதிப்பை இத்தகைய செயல்களால் குறைத்துவிட முடியாது.

அவருக்கு அரசின் பாதுகாப்பெல்லாம் பெரிதில்லை. அவர் ஆற்றியுள்ள மக்கள் தொண்டுக்கும், மக்களுக்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மட்டுமல்ல, நன்றியுணர்வுடைய தமிழ்நாட்டு மக்களே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாக இருப்பார்கள்!

 

கி.வீரமணி
தலைவர்,

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *