வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு பிறந்தநாள் விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

குடியேற்றம், ஆகஸ்ட் 31- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் 50ஆவது பிறந்தநாள் விழா, குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலா ளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி இணைப்புரை வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரி வித்தார்.

மாவட்டக் காப்பாளர் வி.சடகோபன், மேனாள் மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன், வேலூர் மாநகர திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பகுத்தறிவா ளர் கழக துணைச் செய லாளர் க.பரமசிவம், பொதுக்குழு உறுப் பினர் சி.லதா,  குடியாத்தம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம், நகரச் செயலாளர் மு.பிரகாசம், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் க.சையத் அலீம், வி.ரவிக்குமார் உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மருத்துவர் பழ.ஜெகன் பாபு பேசுகையில், “உங்களுடைய இந்த அன்பும் வாழ்த்துகளும் மேலும் சிறப்பாக கழகப் பணியாற்றிட எனக்கு வலிமை தருகிறது. அறி வாசான் தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கொள்கை வழியில் உங்களோடு இணைந்து செயலாற்றுவேன். இந்நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

வேலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இ.தமிழ்தரணி நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *