மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைத்தீர் கூட்டம் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.30 தென் சென்னை பகுதிக்குட்பட்ட ‘‘மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்’’ வரும் 02.09.2026 அன்று தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் சென்னை பகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு குறை தீர் கூட்டம் தென் சென்னை வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்“ வரும் 02.09.2026   அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி (எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஒளிப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களும் பாதுகாப்பாக மீட்பு

டில்லி வழியாக தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு

சென்னை, ஆக.30 திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர், நேபாளம், டில்லி வழியாக தமிழ்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நேபாளம் பெருவெள்ள பேரழிவில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 103 பேரில் 21 பேர் ஏற்ெகனவே சென்னை வந்துவிட்டனர். இந் நிலையில், திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு இன்று (30.8.2026)  பாதுகாப்பாக அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஆக.31ஆம் தேதி டில்லி அழைத்து வரப்பட்டு, தமிழ்நாட்டிற்கு இரண்டு குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மீட்கப்பட்ட 39 பேரில், 33 பேர் முதல் குழுவாக கோவைக்கும், எஞ்சிய 6 பேர் இரண்டாவது குழுவாக சென்னைக்கும் வருகின்றனர். அதன் பிறகே அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த இரு குழுக்களுக்கும் தனித்தனியாக விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பயணத்தை ஒருங்கிணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *