இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 30 தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

ஒரு மாதத்திற்குப் பின்பு, இலங்கை நீதிமன்றம் அவர்களில் 3 மீனவர்களை, விடுதலை செய்தது. ஒரு மீனவர் 2-ஆவது முறையாக, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டிருந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த மீனவர் கடந்த 17-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய அரசின் அறிவுறுத்த றையின் பெயரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்பு கடந்த 22-ஆம் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விமானம் மூலம், 7 மீனவர்களையும்,  விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் 7 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *