தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்-முக்கிய பிரமுகர்களை சந்திப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாளை (30.8.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்சி எழுச்சியுடன் நடைபெற உள்ளது.

27-08-2026 அன்று மாலை மாநில கழக ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, விருத்தாசலம் மாவட்ட தலைவர் த. சீ.இளந்திரையன், விருத்தாச்சலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்பரசன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன் ஆகியோர் விருத்தாசலம் தொழிலதிபர் தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த்சோர்டியா, விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், விருத்தாசலம் மாவட்ட காப்பாளர் அ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அவர்களின் பங்களிப்பை, ஒத்துழைப்பை வழங்கிட வேண்டினர் தமிழர் தலைவர் வருகைக்கு எப்பொழுதும் போல எங்களது ஒத்துழைப்பு இருக்கும் என்று மகிழ்வுடன் அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *