திருவனந்தபுரம், நவ.3 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து கேரள அரசும், அம்மாநில ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 3 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக ஆளுநர்மீது கேரள அரசு புகார் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பின்பற்றி கேரளாவிலும் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
