சைபர் மோசடி நிதி இழப்பில் தமிழ்நாடு 4ஆவது இடம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 26– சமீப காலமாக சைபர் குற்றம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட மற்றும் நகர சைபர் குற்ற காவல் துறையில் நாள்தோறும் ஏராளமான புகார்கள் குவிகின்றன.

முதியோர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து இந்த மோசடி நடக்கிறது. இதில் சைபர் குற்றம் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 7வது இடத்தை பெற்றுள்ளது.

மேற்கு வங்கம் முதலிடம், உத்தரப் பிரதேசம் 2ஆவது இடம், மராட்டியம் 3ஆவது இடத்திலும் உள்ளது. அதேபோல் சைபர் குற்ற மோசடியில் அதிக நிதி இழப்பு ஏற்படும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 4ஆவது இடத்தை பெற்றுள்ளது. மராட்டியம் முதலிடம், கருநாடகா 2ஆவது இடம், உத்தரப்பிரதேசம் 3ஆவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மோசடி தொடர்பாக 88 ஆயிரத்து 355 புகார்கள் வந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *