இந்நாள் – அந்நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

மகளிர் சமத்துவ நாள்
இன்று (26.8.2026)

 

பெண்களின் உரிமைகளையும் சாதனை களையும் கொண்டாடும் திருநாள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26, 2026 அன்று மகளிர் சமத்துவ நாள் உலகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

சமுதாயத்தில் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்கும், பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இதுவரை எட்டப்பட்ட வெற்றி களை நினைவு கூறுவதற்கும் இந்நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமையை உறுதி செய்யும் அமெரிக்க அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்  கடந்த 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாற்றில் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளிகளின் நீண்ட கால முயற்சியின் வெற்றி இதுவாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்பைப் போற்றும் வகையில், 1971 ஆம் ஆண்டு முதல் அமெரிக் காவில் அதிகாரப்பூர்வமாக மகளிர் சமத்துவ நாள் கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் உலகளாவிய விழிப்புணர்வு நாளாக உருவெடுத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *