உரிமைகளுக்குப் போராடிய தொழிலாளர் தலைவர், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2026) காலை 7.30 மணிக்கு, செம்பியம் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள
திரு.வி.க. சிலைக்குக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வடசென்னை மாவட்டக் கழகக் காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், செயலாளர் டி.ஜி.அரசு, ஜி.கோபிநாத், இசைப்பாடகர் ஜெ.பாஸ்கர், எம்.முகேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவிப்பு
Leave a Comment
