திருப்புகழ் ஆணையம் அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையோடு சமர்பிக்கத் திட்டமிட்டிருந்தோம் திமுக மேனாள் அமைச்சர் கே.என்.நேரு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 25– “திருப்புகழ் ஆணையம் அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து, குறிப்புகளை இப்பேரவையில் வைக்க வேண்டும் என்று பணிகளை மேற் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் வந்துவிட்டதால் சமர்ப்பிக்க முடியவில்லை” என திமுக மேனாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 24.8.2026 அன்று பேசிய மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி திருப்புகழ் ஆணையம் அறிக்கையை ஏன் பேர வையில் வைக்கவில்லை என சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

திருப்புகழ் தலை மையில் அமைக்கப்பட்ட ஆணையம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று இடைக்கால அறிக்கை தந்தது. 2023 மார்ச் 14 அன்று இறுதி அறிக்கையை தந்தது. அப்போது தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு, முதல மைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட் டோர் முன்னிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டது.

அந்த அறிக்கையில், அவசர கால தீர்வு, நீண்ட கால தீர்வு என பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவசர கால பணிகளை உடனடியாக மேற்கொள்ள அப்போதைய முதல மைச்சர் உத்தரவிட்டார். சென்னை வெள்ளத் தடுப்பு பணிகள் என்ற அடிப்படையில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்புகழ் கமிட்டி அளித்த 161 இலக்குகள் மீதான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு பணிகள் நிறை வேற்றப்பட்டன.

திருப்புகழ் ஆணையம் அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து, குறிப்புகளை இப்பேரவையில் வைக்க வேண்டும் என்று பணிகளை மேற் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் வந்துவிட்டதால் சமர்ப்பிக்க முடியவில்லை. இப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள், அந்த ஆணையத்தின் அறிக்கையை தாராள மாக பேரவையில் சமர்ப் பியுங்கள். மீதமுள்ள பரிந்துரைகளை நீங்கள் முழுவதுமாக நிறை வேற்றுங்கள். நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *