கொளத்தூரில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 25- கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற் றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து கொளத் தூர் தொகுதியில் பயன் படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனு மதி கேட்டு, அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ தலைமை யிலான வழக்குரைஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக் குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர்.

பல்வேறு முறைகேடுகள்

அப்போது தொகுதியில் 1, 17,28, 32, 75, 78, 79, 84, 87, 112,122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேட், வாக்கு பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. பெல் நிறுவனத்தால் நிய மிக்கப்பட்ட பொறியாளர் உடன் இருந்தார். விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட்களை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறுகளை சுட்டிக்காட்டிய பிறகும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரி பார்த்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு முறைகேடு கள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என்றும், நான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *