அமராவதி, ஆக.24 மகாராட்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்துச் சிதறியதில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று (24.8.2026) அதிகாலை 3.30 மணியளவில் 3 ஆவது மாடியில் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் வெண்டிலேட்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், பயங்கரமாக வெளியேறிய தீ மற்றும் புகையினால் பாதிக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதனால், பதறிப்போன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசரப் பிரிவிற்கு விரைந்து சென்று குழந்தைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

