ஆங்கிலம் இந்திய மொழி கிடையாதா? 22 மொழிக்கு ஆசிரியர்கள் எப்படி? அதிரடி கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.22 மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் பல் வேறு அதிரடி கேள்விகளை எழுப்பி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மும்மொழிக் கொள்கையை இவ்வாண்டு முதல் அமல்படுத்த வுள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்தது. இதற்கு இந்திய அளவில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (21.8.2026) தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மொழி ஒன்றைப் படித்து வரும் மாணவர்கள் திடீரென்று அதனை விட்டு, முன்னர் படிக்காத இந்திய மொழிக்கு மாறுவது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும், வேலை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாணவர்கள் ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு வெளிநாட்டு மொழியைப் படிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆங்கிலம் பல நூற்றாண்டாக நம் வரலாற்றிலும் சமூகத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. பல இந்திய மாநிலங்களில் ஆங்கிலமே அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. அப்படி இருக்கும்போது அதை எவ்வாறு அந்நிய மொழி யாகக் கருத முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், 23 இந்திய மொழி களில் கற்பிக்க கொள்கை அளவில் அனுமதி இருந்தாலும், அதற்குத் தேவையான தகுதியான ஆசிரியர்களும், பாடப் புத்தகங்களும், உள்கட்டமைப்பும் உண்மையில் எத்தனை சி.பி.எஸ்.இ பள்ளிகளில் உள்ளன என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

அதோடு, புதிய மும்மொழிக் கொள்கை அவசரமாக அமல் படுத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும், ஏற்ெகனவே ஒரு குறிப் பிட்ட மொழியைக் கற்றுக் கொண்டிருக்கும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து இதை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *