தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருநாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றுவது என்பது இது முதல் முறை கிடையாது. ஏற்ெகனவே, 4 முறை நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதாவது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 5, 2015-ஆம் ஆண்டு மார்ச் 27 ஆகிய தேதிகளில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதியும், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது 2022-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (19.6.02026) 5-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
