தமிழ்நாட்டுக்கு முழு நீர்ப்பங்கையும் தரத் தயாராக உள்ளோம் கேரள முதலமைச்சர் வி.டி.சதீஷன்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.21- தென்மாநில முதலமைச்சர் மாநாடு தொடர்பாக கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முழு நீர்ப் பங்கையும் வழங்க கேரளா தயாராக உள்ளது. புதிய அணையின் வடிவமைப்பு, இடத் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம்; அதற்கான முழுச் செலவையும் கேரளம் ஏற்கும்.

தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், விழிஞ்ஞத்தை மய்யமாகக் கொண்டு கேரளாவை முன்னணி துறைமுக நகரமாகவும், கடல்சார் பொருளாதார மய்யமாகவும் மாற்றுவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதேவேளையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *