“வந்தே மாதரம்” முதல் இரண்டு அடிகள் மட்டுமே பாடப்படும் 1937 தீர்மானத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் திட்டவட்டம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.21 அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இசைக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசு நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றி சட்டமாக்கியது.

6 அடி கொண்ட 3 நிமிடம் 10 வினாடிகள் நீளமுள்ள வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.

கடந்த வாரம் நடந்த 80ஆவது சுதந்திரத்தினவிழாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் இசைக்கும்போது அதை பாதியில் நிறுத்துமாறு சோனியா காந்தி சைகை செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது.

ஆனால் மூத்த தலைவர் கார்கே அமர நாற்காலி எடுத்து வரவே சோனியா சைகை செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

டில்லியில் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்கும் மேலான செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர். 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வரலாற்றுப் பின்னணி

அக்டோபர் 28, 1937 அன்று காந்தியார், ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் மவுலானா அசாத் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழு முதல் முறையாக இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.

பங்கிம் சந்திரர் எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்ற வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் தாய் நாட்டைப் போற்றுவதாகவும், பிந்தைய சரணங்கள் குறிப்பிட்ட மத மற்றும் புராண குறியீடுகளை கொண்டிருப்ப தாகவும் அமைந்துள்ளன. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இணையும் தேசிய நிகழ்வுகளுக்கு முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொருத்தமானவை என ரவீந்திரநாத் தாகூர் ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் மூலம் ஆலோசனை வழங் கினார்.

சுதந்திரத்தின் பின் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிவித்தபடி, ‘ஜன கண மன’ தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *