சாமியார்களின் இரட்டை வேடம்: மக்களுக்குக் கோமியம், தனக்கு அமெரிக்க வைத்தியம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சிகாகோ, ஆக.21 ‘‘பசுவின் மூச்சைச் சுவாசித்தால் நோய் தீரும், கோமியம் குடித்தால் புற்றுநோய் குணமாகும், நாட்டுப் பசுவின் சாணமும், மூத்திரமும் சர்வ ரோக நிவாரணி’’ என்று மேடை களில் மணிக்கணக்கில் ஆன்மிக உபன்யாசம் செய்து வந்தவர் உத்தரப் பிரதேசம் பிருந்தாவனத்தைச் சேர்ந்த சுவாமி அனிருத்தாச்சாரி.

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்க ளும் வாழ்கிறார்கள் என்றும், மனிதனின் அத்தனை இன்னல்களுக்கும், பிணி களுக்கும் பசுமாடு ஒன்றே தீர்வு என்றும் கூறி, பாமர மக்களைச் சாமர்த்தியமாக நம்பவைத்து வந்த இந்தச் சாமியாரின் உண்மையான முகத்திரை இப்போது கிழிந்துள்ளது.

அண்மையில் தனக்கு மூட்டுவலி ஏற்பட்டவுடன், தான் ஆன்மிகப் பிரச்சாரம் செய்த கோமியத்தையோ, பசுவின் சாணத்தையோ தேடி அவர் போகவில்லை. மாறாக, உடனடியாக விசா எடுத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தின் அதிநவீன மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துவிட்டார். ஆங்கிலம் பேச வராததால், தனக்காகவே ஒரு சிறப்பு மருத்துவரை மொழிபெயர்ப்பாளராக உடன் அழைத்துச் சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தங்களை நம்பி வரும் ஏழை மற்றும் பாமர பக்தர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அறிவியல் ஆதாரமற்ற கதைகளைச் சொல்லி மூடநம்பிக்கை யைப் பரப்பும் சாமியார்கள், தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது மட்டும் மேலைநாட்டு நவீன மருத்து வத்தைத் தஞ்சம் அடைவது எந்த விதத்தில் நியாயம்?

மடத்து வாசலில் காத்துக் கிடந்து, சாமியார் சொன்ன கோமியத்தைக் குடித்து நோயைக் குணப்படுத்தலாம் என்று நம்பிக் கொண்டிருக்கும் ‘பக்தர்கள்’தான் இதில் ஏமாந்து நிற்கும் அப்பாவி மனிதர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *