டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர்நீதிமன்றம். ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
* மாணவர்கள் போராடத் தடை: சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது கல்லூரிக் கல்வி இயக்ககம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அடுத்த 25 ஆண்டுகளுக்கும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இதே நிலை தொடர காங்கிரஸ் வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இம்முறை இந்தியா எவ்வாறு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது – கடந்த காலங்களில் என்ன சிக்கல்கள் ஏற்பட்டன? தற்போது நடைபெற உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி பெயர்களுக்கு முன்-நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் எதுவும் இருக்காது; பதிலளிப்பவரே தங்கள் ஜாதியை குறிப்பிட வேண்டும். 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு போது நிகழ்ந்தது போல, இதுவும் ஒரு கட்டுக்கடங்காத அல்லது மிக நீண்ட பட்டியலுக்கு வழி வகுக்கக்கூடும், விகாஸ் பதக்கின் விரிவான கட்டுரை அம்பலப்படுத்துகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ‘நன்கொடைத் திருட்டு’ விவகாரங்கள் குறித்து நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு; ‘வந்தே மாதரம்’ பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாடவும் தீர்மானம்.
* ‘ராமன் கோயில் நன்கொடை திருடர்கள்’ மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஆசம் கானுடன் தொடர்புடைய அறக்கட்டளை மீது அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகள் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கேள்வி
தி இந்து:
* 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னால் தீய நோக்கம் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ். மதம், பிறந்த தேதி மற்றும் பதிலளிப்பவர்களின் பெற்றோரின் பிறந்த இடம் ஆகியவை குறித்த முன்னெப்போதும் இல்லாத வகையிலான கேள்விகள் சேர்க்கப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னால் “ஆழ்ந்த தீய நோக்கம்” இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 11, 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக குழுவை மாற்றியமைத்தது என்.சி.இ.ஆர்.டி. (NCERT); 20 உறுப்பினர்களில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட 4 பேர் நியமனம்
– குடந்தை கருணா
