பள்ளி, கல்லூரி சம்பவங்கள்: அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு! உதயநிதி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 16- கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

இதுபற்றி உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில்,

“சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்டதால், அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில நாள்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி!

போதைப் பொருள் பயன்படுத்து வதையோ – விற்பதையோ அம்பலப் படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.

நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம். குறிப்பாக, பள்ளிகளில்  – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக் கேடு. மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சிலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *