காரைக்குடியில் விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காரைக்குடி, ஆக.15 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவா் ராமநாதன் வைரவன் தெரிவித்தார்.

காரைக்குடி அழகப்பா கல்விக் குழுமத்தின் பவநகா் அரங்கில் 14.8.2026 அன்று செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காரைக்குடியில் அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை, மருத்துவ அறிவியல் நிறுவனம் உயா்தர, எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவச் சிகிச்சை, நவீன சிறப்பு மருத்துவச் சேவைகள், மருத்துவக் கல்வியை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆக. 3-ஆம் தேதி இந்த மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில், 2,100-க்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளி முகா மில் பதிவு செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா்.

இந்த முகாம் விரிவுபடுத்தப்பட்ட எளிதில் அணுகக்கூடிய மருத்துவச் சேவைகளின் அவசியத்தை உணா்த்தி யத்துடன், நிறுவனத்தின் வளா்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும் அமைந்தது.

இதைத் தொடா்ந்து, வெளி மருத்துவப் பயனாளிகள் பிரிவு சேவைகள் தற்போது தொடங்கப்பட் டுள்ளன. இந்தப் பிரிவு வாரத்தின் 7 நாள்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை முழுமையான மருத்துவ நிறுவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான சட்டப்பூா்வ அங்கீகாரங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலுக்கு உள்பட்டு விரைவில் அழகப்பா மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வாழ்நாள் கனவை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றார் அவா்.

பேட்டியின் போது அழகப்பா பன்நோக்கு மருத்துவமனை இயக்கு நரும், மருத்துவருமான அனிதா ராதா கிருஷ்ணன் உடனிருந்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *