சென்னை, ஆக.14 குரூப் 1 தேர்வில் கூடுதலாக 20 இடங்கள் அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர், ஒரு தொழிலாளர் உதவி ஆணையர் என 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தற்போது கூடுதலாக 20 இடங்களை அதிகரித்து இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது. முதல்நிலை தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக் கட்டமாக முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
