பெங்களூரு, ஆக. 13 பெங்களூரில் கருநாடக மாநில செயல் மறவர் களின் கலந்துரையாடல் கூட்டம் 9.8.2026 அன்று காலை 11 மணிக்கு மிகச் சிறப்புடன் ப.சு.மணி நூலகத் தில் நடைபெற்றது.
கருநாடக மாநிலத் கழகத் தலைவர் சே.குணவேந்தன் தலை மையில் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கத் தினை விளக்கி, இணைப்புரை வழங்கினார்.
முன்னிலையேற்று பொதுக் குழு உறுப்பினர் இரா.இராசாராம், பகுதித் தலைவர் சி.அரங்கநாதன், காடுகொண்டஹள்ளி பகுதி தலைவர் கி.இராசன், மாநிலத் துணைத் தலைவர் ஜெ.அருண், கழகக் காப்பாளர் மு.சானகிராமன் உரை நிகழ்த்தினர்.
புதிய உறுப்பினர்கள்
புதிய உறுப்பினர்களாக கழகத்தில் இணைத்துக் கொண்ட திருவாரூர் – அத்திப்பள்ளி அன்பு நெஞ்சன், இராமநாதபுரம் – விஞ்ஞானப் பொறியாளர் கரு.பாஸ்கரன் ஆகிய இருவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது. பகுத்தறிவாளர் ப.சங்கரதாஸ், ஜெ.பிரபு, அன்பு நெஞ்சன், கரு.பாஸ்கரன் கருத்துரை வழங்கினர்.
இயக்கம் தொடங்கிய
நாள் முதல்
நாள் முதல்
திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் ந.இராமசாமி இயக்கம் தொடங்கிய நாள் முதல் இந்நாள் வரை நிகழ்ந்த செயல் பாடுகளை விளக்கினார்.
மாநிலக் கழகத் தலைவர் சே.குணவேந்தன் பெரியார் – அண்ணா பிறந்த நாளை தமிழ், கன்னடம், ஆங்கில சிந்தனையா ளர்கள், அறிஞர்களை அழைத்து மிகச் சிறப்பான வகையில் செப்டம்பர் திங்களில் நடத்துவது, கழகத் தோழர்கள் குறித்த காலத்தில் கழக நிகழ்வுகள் கலந்து கொள்வது, கழக அமைப்பின் தலைமையில் அறக்கட்டளைகளை நிறுவி செயல்படுவது, ஆண்டுகள்தோறும் கழக செயல் வீரர்கள், பெரியார் – அண்ணல் அம்பேத்கர் போற்றும் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பிப்பது குறித்து நெடிய உரையினை வழங்கி சிறப்பித்தார்.
சுயமரியாதைத்
திருமணச் சட்டத்தினை…
திருமணச் சட்டத்தினை…
தமிழ் நாட்டில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் 1929 முதல் சுயமரியாதை மாநில செங்கல்பட்டு மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டு, 1967ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற, பேரறிஞர் அண்ணாவால் சட்ட வடிவமாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமண சட்டத்தினைப் போன்று, கருநாடக மாநிலத்தில் சுயமரியாதை திருமணச் சட்டத்தினை கொண்டு வந்து நிறைவேற்ற கருநாடக மாநில அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது என்றும், இரண்டாவதாக மூடநம்பிக்கை ஒழிப்பினை சட்ட வடிவமாக்கிட கருநாடக மாநில அரசினை கேட்டுக் கொள்வதென்ற தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எஸ்சிவக்குமார், யோகேஸ்வரி, பெரியார் பிஞ்சு பரிவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முனைவர் மு.இரகுராமன் நன்றியுரை கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
