சென்னை காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவு’ தொடக்கம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 13- காவல் துறையினர் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக கைப்பேசி எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

காவலர் முதல் உயர் காவல் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகின் றனர். ஆனால் ஒரு சிலரின் தவறான செயல் பாடுகளால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை காவல் துறையில் புதிதாக ‘ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்பிரிவு மூலம் காவல் துறையில் லஞ்சம் தொடர்பான புகார்களை உடனுக்குடன் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையினர் தங்களது பணிகளை செய்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டாலோ, லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ அது குறித்த தகவலை பொது மக்கள் 78717- 23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ அல்லது ‘வாட்ஸ்- அப்’ மூலமாகவோ தெரிவிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *