மன்னார்குடி, ஆக 12- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரகதீஷ், ‘சைபர் கிரைம் கிரைசஸ் ரெஸ்பான்ஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் இணையதளங்களில் பெண்களுக்கு எதிராகப் பரப்பப்படும் ஆபாச காட்சிப்பதிவுகள், ஒளிப்படங்கள் மற்றும் அவதூறு கருத்துகளைக் கண்டறிந்து, அவற்றை இணையத் திலிருந்து அகற்றும் தீவிரப் பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில், அசாம் மாநில இணையதளங்களில் அம்மாநிலப் பெண்களுக்கு எதிராகப் பரவி வந்த ஆபாசப் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை நீக்க அம்மாநில காவல்துறை பிரகதீசி அமைப்பின் உதவியை நாடியது.
இதனை ஏற்று உடனடியாகச் செயல்பட்ட பிரகதீஷ் மற்றும் அவரது குழுவினர், விரைவாக நடவடிக்கை எடுத்து 200க்கும் மேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை இணையத்திலிருந்து வெற்றிகரமாக அகற்றினர்.
இளைஞரின் இந்தச் சிறப்பான சேவையைப் பாராட்டி, அசாம் மாநில சைபர் கிரைம் காவல்துறை ஆணையர் எஸ்பி சி.ஆர்.சிங் பிரகதீஷுக்கு அதிகாரப்பூர்வ பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருப்பதாவது:
“இணையதளங்களில் பரவிய 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றிய உங்களது குறிப்பிடத்தக்க சாதனையை நாங்கள் அங்கீகரித்துப் பாராட்டுகிறோம். உங்களது நடவடிக் கைகள் எண்ணற்ற பெண்களின் கண்ணியம், தனிஉரிமை மற்றும் பாதுகாப்பைக் காப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இணையக் குற்றங்களும், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் உங்களின் இந்தச் செயல் தைரியம், பொறுப்புணர்வு மற் றும் மனிதநேயத்தின் சிறந்த முன் மாதிரியாகும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மரியாதையான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் எங்கள் முயற்சிக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவை அசாம் காவல்துறை பெரிதும் மதிக்கிறது.”
இந்த அங்கீகாரம் குறித்து மென் பொறியாளர் பிரகதீஷ் கூறும்போது:
“டிஜிட்டல் குற்றங்களைப் பொறுத்தவரை எவ்வளவு விரை வாகச் செயல்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் குற்றத்தை முற்றி லுமாகத் தடுத்து, இணையத்திலிருந்து அவற்றை அகற்றிப் பாதிப்புகளைக் குறைக்க முடியும். அந்தப் பணியைத் தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்,” எனக் தெரி வித்துள்ளார்.
