அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு சீனா சாடல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா.

எல்லையோர மாநிலமான அருணாச்சலில் உள்ள அந்த 27 இடங்களில் நிலங்ககள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னமும் அடங்கும். இந்தியா – சீனா எல்லையோர பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய தொடர்ச்சியாக சீனா முயற்சித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதை சீனா இப்போது சாடியுள்ளது.

இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“எல்லையோர பகுதியில் சீனா புவியியல் பெயர்களைச் சீரமைக்கும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் சூழலில், எல்லையில் நிலவும் சூழலை மோசமாக்கும் வகையில் இந்தியாவின் இந்த ஒருதலைபட்ச நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கை இருதரப்பு உறவுகளின் சமூகத்துக்கு உதவாது” என்று சிங்குவா பல்கலைக்கழக தேசிய உத்திசார் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறை இயக்குநர் கியான் ஃபெங் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *