கடலூரில் வழக்குரைஞராகவும், கழகப் பிரச்சாரகராகவும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வந்த கி. வீரமணி அவர்களை ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைத்தார் தந்தை பெரியார். அதை ஆணையாகவே ஏற்று ‘விடுதலை’ ஏட்டின் பொறுப்பேற்க முன் வந்த ஆசிரியர் கி. வீரமணி அவர்களை ‘வரவேற்கிறேன்’ என்று தலையங்கம் எழுதி தந்தை பெரியார் வரவேற்ற நாள் இன்று (10.8.1962)
