புதுடில்லி, ஆக.10 உச்ச நீதிமன்ற கொலிஜீயம், நான்கு மூத்த நீதிபதிகளை வெவ்வேறு உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்ற கொலிஜீயம் கூட்டத்தில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையில் எடுக்கப் பட்ட முடிவின் படி வெளியிடப்பட்டுள்ளன. நீதிபதி வி. காமேஸ்வர் ராவ்: தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் இவர், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப ்பட்டுள்ளார்.
நீதிபதி ரவீந்திர வி. குகே: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியான இவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளார். நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியான இவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமனம் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதி அஸ்வினி குமார் மிஸ்ரா: பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியான இவர், அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப ்பட்டுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 7 நீதிமன்றங்களுக்கு நிரந்தர தலைமை நீதிபதிகள் இல்லாத நிலையில், இந்த பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் இறுதி செய்யப் படும்.
