மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: மூன்று அரசுப் பணித் தேர்வுகள் ரத்து சிபிஅய் விசாரணை கோரி போராட்டம் தீவிரம்!

1 Min Read

ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட் டத்தைத் தொடர்ந்து, அம்மாநில அரசுப் பணித் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்வுகளில் பெரு மளவில் முறைகேடுகளும் ஆள்மாறாட்டமும் நடந்ததாகக் கூறி, அம்மாநிலத் தலைநகர் ராஞ்சியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் இந்த எழுச்சிமிக்க போராட் டத்தால் அரசுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக, சர்ச்சைக்குரிய 3 தேர்வு களையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

தேர்வுகள் ரத்து செய் யப்பட்டது தங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றாலும், இத்துடன் போராட் டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர் அமைப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட பின்னணி நபர்கள் மற்றும் அதிகாரி களைக் கண்டறிய இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *