சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் அபிஜீத் தீப்கே

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.9 மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும். பொதுப்பணித் தேர்வுகள் தொடர்பான கவலைகளைக் களைவதற்காக, பீகார் மாணவர்கள் தலைமை நீதிபதியைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருந்தனர்.

மேலும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு விதிமுறைகள் சுமார் 2012-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டதால், அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில மொழிப் பின்னணியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இது மானுடவியல் மற்றும் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. பயிற்சி மய்யங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், நகரங்களில் உள்ள மோசமான அறைகளில் தங்க வேண்டி யிருப்பதாலும், வீட்டு உரிமையாளர்களிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலும், தங்குமிடச் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

சமூகம் மேம்படுவதால், கிக் வேலை என்ற கருத்து மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது. இந்தியாவில், கிக் வேலை என்பது தொழிலாளர் சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கொள்கை சீர்திருத்தமும், ஒரு பாதுகாப்பு வலையும் தேவை.

ஒரு சிறிய ஊக்கத்தொகைக்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசியல் உரையாடலை மாற்ற விரும்பு கிறோம். சமூகத்தில் பரிவும் இரக்கமும் குறைந்து வரு கின்றன. நாம் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் மன நோயாளிகளாக மாறத் தொடங்கி விட்டோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *