காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்துவோம்
செவிப்புலனை குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்
Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கைசமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரிவு வெளியிட்ட “உலக காது கோளாமை குறித்த விழிப்புணர்வு நாள்” ஒளிப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவியான செல்வி. ரிஸ்வானா வின் படம் இடம்பெற்றது.
இதிலென்ன சிறப்பு?
தற்போது இறுதி ஆண்டு மருத்துவம் பயிலும் ரிஸ்வானா பிறக்கும் போதே காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது தந்தை மற்றும் தாயின் கடும் உழைப்பு மற்றும் போராட்டத்தாலும் சாதுர்யமாக அறிவோடு விழிப்புணர்வோடு செயல்பட்டு மகளுக்கு இருந்த கேட்டல் திறன் குறைபாட்டை உடனே கண்ட றிந்து அதற்குரிய நவீன சிகிச்சையான காக்ளியார் இம்ப்ளாண்ட்டை பொருத்தி அவர்களது மகள் நன் றாக கேட்கவும் பேசவும் படிக்குமாறு செய்து தற்போது அவர் மருத்துவராகவும் வரப்போகிறார் என்று எண் ணும் போது நவீன மருத்துவ அறிவியலின் முக்கியத் துவத்தையும், காது கேளாமை குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற்றிருப்பது முக்கியம் என்பது புலப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறவியிலேயே காது கேளாமை நோய்க்கு உள்ளான குழந்தைகளை பிறந்த உடனேயே கண்டறிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரி களில் இதற்கென சிறப்பு மய்யங்கள் செயல் பட்டு வருகின்றன.
அங்கு OTO ACOUSTIC EMISSION செவி ஒலி உமிழ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒலிபுகா அறையில் பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது.
இவ்வாறு பிறந்த குழந்தைக்கு மூன்று மாதத்திற்குள் காது கேட்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் ஒருவேளை நம் குழந்தைக்கு காது கேட்கும் திறன் பிறவியிலேயே இல்லாமல் இருந்தால் (CONGENITAL DEAFNESS) கவலைப்படத் தேவையில்லை தமிழ்நாட்டில் பிறவிக் காது கேளாமை குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியார் இம்ப்ளாண்ட் எனும் நவீன செயற்கை செவிப்புலன் மீட்கும் கருவியை பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக பொருத்தும் திட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக 2009ஆம் ஆண்டு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் செயல்முறைப்படுத்தினார்.
தமிழ்நாட்டைப் பின்பற்றி கேரளாவில் 2012ஆம் ஆண்டு இந்த திட்டம் தனியார் பங்களிப்போடு செயல்பாட்டுக்கு வந்தது.
ஒரு காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்த சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்ற சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் மொத்த செலவினத்தையும் அரசு ஏற்று இதுவரை ரூபாய் 327 கோடி இதன் பொருட்டு செலவிடப்பட்டு 4101 குழந்தை களுக்கு காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட் டுள்ளது.
பள்ளிச் சிறார் நலன் பேணும் மருத்துவர்கள் அடங்கிய குழு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்லாயிரம் காது கேளாத குழந்தைகளை அடையாளம் கண்டு இந்த சிகிச்சைக்கு உட்படுத்தி செவிப்புலனை மீட்க உதவியுள்ளனர்.
தங்களது குழந்தைக்கு காது சரியாக கேட்காமல் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவை உடனே அணுக வேண்டும்.
எத்தனை விரைவாக காது கேளாமையை கண் டறிகிறோமோ அத்தனை நல்லது. காக்ளியார் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச் சையை ஒரு வயது கடந்த குழந்தைகளுக்கு செய்ய முடியும்.
ஆயினும் ஒன்றரை வயதுக்குள் இந்தக் கருவி பொருத்தப்படும் போது சீக்கிரமாகவே குழந்தை நன்றாக கேட்டு பேசி படிக்க ஆரம்பிக்கும். கற்றலில் எந்த பிரச்சினையும் வராது.
அப்படியே தள்ளிப்போனாலும் மூன்று வயதுக்குள் ளாவது காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டால் சிறப்பான முடிவுகள் கிடைக்கும்.
அதிகபட்சம் இந்திய வரம்புப்படி அய்ந்து வய துக்கு மேல் இந்த இம்ப்ளாண்ட் பொருத்தப்படுவ தில்லை. காரணம் பிறவிக்குறைபாட்டிற்கு அதற்கு மேல் இம்ப்ளாண்ட் பொருத்துவதால் பெரிய பலனில்லை.
காக்ளியார் இம்ப்ளாண்ட் தற்போது முதல மைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்படுகிறது. இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்ட பின் பேச்சுப் பயிற்சி மொழிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும் . இவ்வாறாக குழந்தைகளுக்கு கேட்டல் திறன் அதிகரிக்கும் போது கற்றலும் பேச்சும் சிறப்பாக அமையும். அவர்களது எதிர்காலமும் வளம் பெறும்.
உங்களுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு மருத்துவர்களை அணுகி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் பலன்களைப் இலவசமாகப் பெற்றிடுங்கள்
விரைவில் பிறவிக் காது கேளாமையைக் கண்டறி வோம்
விரைவில் காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்து வோம்
செவிப்புலனை குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்
அவர்களின் எதிர்காலத்தைக் காத்திடுவோம்.