தமிழ் இனி கட்டாயம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,மே23- ‘சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்’ என, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜமுருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை: தமிழ்நாடு பள்ளிகளில், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, 2015-2016ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. அதற்கு அடுத்த, 2016-2017ஆம் கல்வி ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும், அடுத்த கல்வி ஆண்டில் மூன்றாம் வகுப்புக்கும் என, ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. கடந்த 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. அடுத்த மாதம் துவங்க உள்ள, 2023 – 2024ஆம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 – 2025ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ., – அய்.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 – 2025ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும். இந்த மாணவர்கள், பொதுத் தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியதும் கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை, விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணி அமர்த்தி, மாணவர் களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும். தமிழ் கட்டாய பாட முறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *