நாகர்கோயில், ஆக. 7- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் 2.8.2026 அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் கருத்துரை யாற்றினார். மாவட்ட காப்பாளர் ம.தயாளன், ப. க. மாவட்ட தலைவர் உ. சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாநில கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், பெரியார் பெருந் தொண்டர் சி.கிருஷ்ணேஷ்வரி, இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்சு, கோட்டார் பகுதி தலைவர் ச. ச. மணிமேகலை, ப. க. செயலர் எம். பெரியார்தாசு, கழகத் தோழர்கள் முத்து வைரவன், ஆதித்தன், கார்மல் மற்றும் ஏராளமானர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அகஸ்தீஸ்வரம் கழக ஒன்றிய செயலாளர் மறைவுற்ற எஸ். குமாரதாசின் மறைவிற்கு இந்த கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அறிவுலகப் பேராசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழாவினை கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் எழுச்சிகரமாக நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆஆவது ஆண்டு விழா மாநாடு திருநெல்வேலியில் 19.8.2026 அன்று நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேசனலிஸ்ட் போன்ற இதழ்களுக்கு அதிகமான சந்தாக்களை சேர்த்து வழங்குவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
