குறிப்பிட்ட பிரச்சினைக்குச் சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.6 மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்காகப் புதிய சட்டம் இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ‘தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தின்’ நிறுவனர் ஆர். தம்பையா, தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த ‘சாலை பாதுகாப்பு சட்டம்’ ஒன்றை இயற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 19 முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய அம்சங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளில் தடையற்ற நடை பாதைகள் அமைக்கப்பட வேண்டும். சாலை நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்கத் தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: “குறிப்பிட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக புதிய சட்டம் இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், 19 வெவ்வேறு கோரிக்கைகளை ஒரே மனுவில் திரட்டி எழுப்பவும் முடியாது.” எனவே, இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், மனுதாரர் தனது கோரிக்கைகள் குறித்துத் தனித்தனியாகப் புதிய மனுக்களைத் தாக்கல் செய்து முறையிடலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் வயது பற்றிய அறிவிப்பு: பயனர்களுக்கு நிறுவனத்தின் முக்கிய விளக்கம்!

புதுடில்லி, ஆக.5 வாட்ஸ்அப் செயலில் அண்மையில் சில பயனர்களுக்கு, “இந்தியாவில் வரவிருக்கும் சட்டங்களின்படி உங்கள் வயதை கேட்க வேண்டியுள்ளது” என்ற குறிப்புடன் பிறந்த தேதியைப் பதிவு செய்யுமாறு அறிவிப்பு அனுப்பப்பட்டது. இது பயனர்களிடையே சில கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

சட்டங்களுக்கு இணங்குதல்: இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவுள்ள ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்’ (DPDP Act) போன்ற புதிய விதிகளுக்கு இணங்கவே, பயனர்களின் வயதை உறுதிப்படுத்தும் தனியுரிமை பாதுகாப்பு முறைகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

செயல்பாட்டில் மாற்றமில்லை: இந்த சோதனையால் வாட்ஸ்அப்பின் வழக்கம் போன்ற செயல்பாட்டிலோ அல்லது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திலோ எந்தவித மாற்றமும் இருக்காது.

முழுமையான தனியுரிமை: பயனர்கள் பதிவு செய்யும் வயது தொடர்பான தகவல்கள் முற்றிலும் தனிப்பட்டவை. அவை மற்ற எந்த வாட்ஸ்அப் பயனர் களுடனும் பகிரப்பட மாட்டாது. கட்டாயமில்லை.

(விருப்பத்தேர்வு): இது ஒரு விருப்பத்தேர்வு (Optional Test) அடிப்படையிலான சோதனை மட்டுமே. எனவே, பயனர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தாவிட்டாலும் வழக்கம் போல தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *